Deliver to DESERTCART.MA
IFor best experience Get the App
Full description not available
E**U
The Book was Really Awesome
இந்த நாவல் ப்ராமின குடும்பங்களை பற்றிய கதைகள். பல குண நலன் களைக் கொண்ட , கலாச்சாரபின்னனிக்கொண்ட ப்ராமின குடும்பங்களைக்கொண்ட ஒரு காலனி. அங்கு நடக்கும் விசயங்களை பின்னனியாகக்கொண்டு, நாம் நம் வாழ்க்கையை எவ்வாறு எடுத்துசெல்வது என்று ஆசிரியர் நமக்கு காட்ட முயற்சி செய்து இருக்கிறார்.அய்யர், அய்யங்கார் , தெலுகு ப்ராமின் , என்ற கலவையான மனிதர்கள். நாலாயிர திவ்யப்ரபந்த்தம் மட்டுமே படிக்கும் ஒரு ப்ராமினர், கடவுள் நீங்கள் வழிபடும் கோவிலிலோ அல்லது சடங்குகளிலோ இல்லை என்று அந்தராத்மா மட்டுமே வாஸ்தவம் என்று கூறிக்கொள்ளும் ஒரு ப்ராமினர், லாரி டிரான்ஸ்போர்ட்டில் வேலை செய்யும் , ஆனால் மிகக்கோவம் கொள்ளும் , மனைவியை மகன்களை கண்டமேனிக்கு பேசும் ப்ராமினர், இரு அழகான பெண்களை பெற்று , எந்த வித அலட்டலும் இல்லாமல் வாழும் ப்ராமின் , திருமனம் செய்துக்கொள்ளாமல் வாழும் மூன்று சகோதரர்கள், கதையின் நாயகன் குடும்பத்தினர், நாயகி குடும்பம் என்று பலதரப்பட்ட மனிதர்கள் நடமாடுகின்றனர்.இந்த கதையில் இதுதான் சரி தவறு என்று ஆசிரியர் அறுதியிட்டுன்கூறவில்லை. அவர் செய்வது எல்லாம் ஒவ்வொரு கதாபாத்திரம் தன்னுடைய தகுதிக்குண்டானவாறு அபிப்ராயம் கொண்டு இருப்பதை சொல்லுகிறார்கள், அதில் எது தவறு சரி என்று வாசகர்கள் எடுத்துக்கொள்ளவேண்டியது தான்.பெண்கள் ஒரு குடும்பம் நடத்துவதற்கு எவ்வளவு முக்கியம் என்பதை தன்னுடைய கதை ஒட்டத்தில் அழகாக எடுத்து சொல்கிறார். கணேசன் குடும்பத்தில் எற்பட்ட குழப்பம் ஆபாசமாக மாறுவதற்கு அவன் அம்மாவின் ஆக்ர்ரோசம் காரணம். அவள் தன்னுடைய பேச்ச்சை யாரும் கேட்பதில்லை என்றுந்தன்னை நொந்துகொள்வதுடன் அது பூதாகரமாக உருவாவது எவ்வாறு என்று ஆசிரியர் அழகாக சொல்கிறார். ஒரு மனைவியோ கணவனோ ஒருவருக்கொருவர் ஆதரவாக இல்லாமல் , ஒருவரை ஒருவர் தாக்கும் களமாக குடும்பம் இருந்தால் அந்த குடும்பம் எவ்வளவு வேதனை அனுபவிக்கும் என்று ஆசிரியர் பல விதங்களில் சொல்கிறார்.ப்ராமின் எவ்வாறு தன்னுடைய த்றமையினாலும் , சமூகத்தில் தன்னுடைய நிலையினை உயர்த்திக்கொள்ள எத்தனை போராட்டம் செய்யவேண்டி இருக்கிறது என்பதனையும் அந்த சமூதாயம் எத்தகைய மாற்றம் அடைந்தது என்பதையும் ஆசிரியர் அழகாக சொல்கிறார்.இந்த நாவலின் மிக முக்கியாமான குறையாக எனக்கு தோன்றுவது எல்லாரும் எல்லா சமயத்திலும் ஏதாவது அபிப்ராயம் சொல்லிக்கொண்டு இருப்பது. ஆசிரியர் தனக்கு தெரிந்த அனைத்தையும் இந்த நாவலில் சொல்லி விடவேண்டும் என்று கருதுவதாகவே நான் கருதுகிறேன்.இந்த நாவலின் அடினாதம் பாடல். சினிமாப்பாட்டு எவ்வாறு பலவித உணர்வுகளை கொடுத்தி மனதை காதல்வயப்படுத்துகிறது என்று சொல்கிறது.ஆனால் இந்த நாவல் நிச்சயமாக சமூகத்தில் வாழவிரும்பும் ஒருவருக்கு தேவையான பாலபாடங்களை கொடுக்கும்.
N**S
Not value for money
It is probably one of the worst books of the author. There had been no proofreading or editing of the book. There are innumerable printing errors. Also there are a lot of factual inaccuracies in the book.
ترست بايلوت
منذ أسبوع
منذ أسبوعين